Tuesday, 23 August 2011

chettinad sunda vatha kulambu

செட்டி நாடு சுண்ட வத்தக் குழம்பு
தேவையானவை
வெந்தயம், சோம்பு, சீரகம், கடுகு, மஞ்சள்தூள், தனியா தூள், தலா 1 டீஸ்பூன்;
பூண்டு, சாம்பார் வெங்காயம் – தலா 10
வர மிளகாய் – 4
மிளகாய்த்தூள் – காரத்திற்கேற்ப (~~ 2 டீஸ்பூன்)
கறிவேப்பிலை
புளிக்கரைசல் – எலுமிச்சை அளவு
நெய் – சிறிதளவு ந-எண்ணெய், காய்ந்த சுண்டைக்காய் (வத்தல்)
செய்முறை
சுண்டைக்காயை சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.
நல்லஎண்ணெய் விட்டு, காய்ந்த பிறகு, கடுகு, வெந்தயம், சோம்பு, சீரகம், பூண்டு, சாம்பார் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கி, புளிக்கரைசல், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
குழம்பு கெட்டியாகி எண்ணெய் மேலக மிதந்து வந்ததும் இறக்கவும். பிறகு வறுத்த சுண்டை வத்தலை போட்டுக் கலக்கவும்

No comments:

Post a Comment